Sunday, July 18, 2010

நெல்சன் மண்டேலாவுக்கு ஐ.நா., கவுரவம்

ஐ.நா., சபை:தென்னாப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம், ஐ.நா., சபை சார்பில் இன்று சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.கறுப்பின மக்களின் விடுதலைக்காகவும், சமூக அமைதிக்காகவும் போராடிய தென்னாப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினம், இன்று முதன்முறையாக சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மண்டேலாவை கவுரவப்படுத்தும் நோக்கில், ஐ.நா., சபை அவரது பிறந்த தினமான ஜூலை 18ம் தேதியை, ஆண்டுதோறும் சர்வதேச மண்டேலா தினமாகக் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

அதன்படி அவரது பிறந்த தினம் இன்று, நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது."நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்' முதன்முறையாக கொண்டாடப்படுவதையொட்டி ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் விடுத்துள்ள அறிக்கையில், "மண்டேலா, பண பலம், அதிகார பலம் இல்லாமல் மக்களுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர்' என புகழாரம் சூட்டியுள்ளார்

No comments:

Post a Comment