Sunday, July 18, 2010

வறுமைப்பிடியில் எட்டு இந்திய மாநிலங்கள்

எட்டு இந்திய மாநிலங்கள் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஐ.நா.,வின் சர்வதேச மனிதவமள மேம்பாட்டு திட்டத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி வறுமை ஒழிப்பு நடவடிக்கை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து, பல்நோக்கு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அதில், இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்கள், 26 ஆப்ரிக்க நாடுகளைவிட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உ.பி., மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், 26 நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 41 கோடி மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.

வறுமை பாதித்த பகுதிகளில், கல்வி அறிவு, சுகாதாரம், சொத்து மதிப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் குடும்ப வருமானம், ஏழ்மைக்கான காரணங்கள் குறித்தும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டனவறுமையின் தாக்கம் தனி நபரில் துவங்கி, குடும்பத்தையும், நாட்டையும், சர்வதேச அளவிலும் பாதிப்பு ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment